For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 இல்லை, 2 இல்லை.. அப்பல்லோவை சுழற்றியடிக்கும் 32 கேள்விகள்.. பதில் வருமா?

ஜெயலலிதா மரணம் தொடர்பான 32 கேள்விகளுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் பதில்கள் தருமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் மரணித்த பின்னரும் இன்னமும் அப்பல்லோ மருத்துவமனை பயங்கரமான மர்ம மாளிகையாகவே இருந்து வருகிறது.

செப்டம்பர் 22-ந் தேதி முதல் இன்று வரை அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த அத்தனையுமே மூடு மந்திரமாக ஏதோ ஒன்று நடந்ததை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஜெயலலிதா மரணத்தை முன்வைத்து அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளின் தொகுப்பு:

32 questions to Apollo Hospital on Jaya's death

1) செப்.22-ந் தேதி யாரிடம் இருந்து போன் வந்து போயஸுக்கு ஆம்புலன்ஸ் போனது?

2) ஆம்புலன்ஸில் சென்ற நபர்கள் யார்?

3) போயஸ் கார்டன் பங்களாவில் எந்த இடத்தில் ஜெ. மயங்கி கிடந்தார்?

4) மயக்கம் போட்ட ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க போயஸில் மருத்துவர்களே இல்லையா?

5) ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் ஏற்றும் போது கருப்பு பூனை பாதுகாப்பு படையினர் வந்தனரா?

6) ஆம்புலன்ஸில் ஜெயலலிதாவுடன் வெளிநபர்கள் யாரேனும் வந்தனரா?

7) அப்பலோவுக்கும் ஜெயலலிதாவின் கருப்பு பூனை பாதுகாப்பு படை வந்ததா?

8) சுயநினைவே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவுக்கு எப்போது சுயநினைவு திரும்பியது?

9) ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சாதாரண காய்ச்சல் மட்டுமே என ஏன் முதலில் அறிக்கை வெளியானது?

10) செப்டம்பர் 23-ந் தேதி அறிக்கையில் ஜெயலலிதா வழக்கமான உணவை உட்கொள்கிறார் என சொன்னது உண்மையா?

11) வழக்கமான உணவை உட்கொள்கிறார் எனில் சுயநினைவு மறுநாளே திரும்பிவிட்டது அல்லவா?

12) சுயநினைவு திரும்பியது எனில் எப்போது அடுத்தடுத்து நோய்கள் குறிப்பாக நோய் தொற்று தாக்கியது?

13) ஜெயலலிதாவுக்கு மீண்டும் சுவாச பிரச்சனை ஏற்பட்டது?

14) நோய் தொற்றுடன் இருந்ததால் யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்பது உண்மையா?

15) காவிரி குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது உண்மையா?

16) காவிரி குறித்து ஆலோசனை நடத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏன் தாக்கவில்லை?

17) சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை 75 நாட்களும் பார்த்திருக்கிறார் எனில் அவருக்கு நோய் தோற்று ஏன் ஏற்படவில்லை?

18) சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட நோய் தொற்று தாக்காத கவசங்களை குறைந்தபட்சம் ஆளுநர், மத்திய அரசுக்கு கொடுத்திருக்கலாம் அல்லவா?

19) யாரையுமே ஒரு முதல்வரை பார்க்கவிடக் கூடாது என கறாராக உத்தரவிட்டது யார்?

20) டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது எதனால்?

21) எக்மோ கருவியை ஒரு வார காலம் கூட பொருத்தி வைத்திருக்கலாம் என்பது சரியா?

22) எக்மோ கருவியை 24 மணிநேரத்தில அகற்றும் 'முடிவு' செய்தது மருத்துவரா? அல்லது வேறு நபரா?

23) எக்மோ கருவியை அகற்ற முடிவு செய்ததற்கு காரணம் என்ன?

24) எக்மோ கருவியை அகற்றும் வரை ஜெயலலிதா உயிருடன் இருந்தார்... அதை அகற்றியதால் மரணமடைந்தார். அதாவது ஜெயலலிதாவை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளீர்கள் என்பது சரியா?

25) அன்று நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என எழுதிய அப்பல்லோ இப்போது சுயநினைவு இல்லாமல் இருந்தார் ஏன் மாற்றி கூறுகிறது

26) ஜெயலலிதாவின் முந்தைய மருத்துவ சிகிச்சை முறைகள் மீது அப்பல்லோவுக்கு ஏன் சந்தேகம் வருகிறது?

27) ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட முந்தைய மருந்துகள் எவை எவை?

28) ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவில் ஏதும் பிரச்சனை இருந்ததா?

29) டிசம்பர் 6-ந் தேதியன்று ஜெயலலிதா தரப்பினர் மீண்டும் அப்பல்லோ வந்தனரா?

30) டிசம்பர் 7-ந் தேதியன்று ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதித்தவர்கள் மீண்டும் வந்தனரா?

31) அப்பல்லோவின் சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிடாமல் மறைப்பது ஏன்?

32) ஜெ. அனுமதிக்கப்பட்ட பின்னர் அப்பலோவில் சிசிடிவி கேமராக்களை அகற்ற சொல்லி உத்தரவிட்டது யார்?

English summary
Here are the 32 questions to Chennai Apollo Hospital on Jayalalithaa's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X