For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை, கோவை, நெல்லை, குமரி மருத்துவ கல்லூரிகளில் 345 கூடுதல் சீட்டுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நெல்லை, மதுரை, கோவை, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் இன்று அறிவித்தார்.

Recommended Video

    விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

    பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: வார்டு மறுவரையறைக்கு பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். நெல்லை, மதுரை, கோவை, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும்.

    345 new seats will be created in Nellai, Madurai, Coimbatore and Kanyakumari

    2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தகவல் தொழிநுட்பத் துறைக்கு ரூ.158 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமங்களை வட்டார தலைமையகத்தோடு கண்ணாடி இழை வட வலையமைப்பு மூலம் இணைக்க ரூ.1230 கோடி ஒதுக்கப்படும்.

    நாகை தரங்கம்பாடி, வெள்ளம்பள்ளத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். போக்குவரத்து துறைக்கு ரூ.2,717 கோடி ஒதுக்கீடும், வீட்டு வசதித்திட்டங்களுக்காக ரூ.2696 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Finance Minister and Deputy Chief Minister O. Panneerselvam today declared in the budget speech that 345 new seats will be created in Nellai, Madurai, Coimbatore and Kanyakumari medical collage hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X