For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மா".... 37 அதிமுக எம்.பிக்களும் ஜெ.வை வணங்கி ஆசி பெற்றனர்

|

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 அதிமுக எம்.பிக்களும் இன்று மொத்தமாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றனர். அவர்களை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தினார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இந்த முறை அதிமுக தனித்துப் போட்டியிட்டது. 39 வேட்பாளர்களின் வெற்றிக்காக முதல்வர் ஜெயலலிதா தனி ஆளாக தமிழகத்தைச் சுற்றி வந்து சூறாவளிப் பிரசாரம் செய்தார்.

37 ADMK MPs meet Jayalalitha

தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. 2ல் மட்டுமே தோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தினார்.

லோக்சபா தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகள்....

தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்பதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர்.

English summary
37 newly elected ADMK MPs met party chief and chief Minister Jayalalitha today and got her blessings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X