For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் 3வது, 4வது அணு உலைகளில் 2023ல் மின் உற்பத்தி: வளாக இயக்குனர் பேட்டி

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 4வது அணு உலைகள் 2023ல் இயங்கும் என வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரத்தில் கேந்திர நிறுவனர் ஏக்நாத் பாண்டே மற்றும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் எஸ் சுந்தர் பார்வையிட்டார்.

3rd, 4th unit in KNPP will start power production in 2023

பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் உலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மின் உற்பத்தியில் இலக்கை தாண்டியுள்ளது. மொத்த உற்பத்தியில் தமிழகத்துக்கு 56 சதவீதம் வழங்கப்படுகிறது. 2வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் 21ம் தேதி மீண்டும் இயங்க தொடங்கும். தற்போது 3 மற்றும் 4வது அணு உலைக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

2023ம் ஆண்டு இவை மின் உற்பத்தியை துவங்கும். 5 மற்றும் 6வது அணு உலை அமைப்பதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. அணு உலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். கூடங்குளம் அணு மின் நிலையம் பொதுமக்கள் ஓத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வித பாதிப்பையும் சந்திக்கவில்லை. மீனவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் வழக்கம் போல் மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர் என்றார்.

English summary
Power production will start in Kudankulam Nuclear Power Plant's third and fourth unit by 2023.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X