For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளிக்கு சென்னையிலிருந்து அக்.15 முதல் 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னையில் பிழைப்பு தேடி வந்துள்ளவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

4,820 Special buses will ply from Chennai to other places,says Minister

ரயில்களிலும், பஸ்களிலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அலைமோதும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினந்தோறும் 4,820 சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும்.

கோயம்பேடு, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கே.கே.நகர் மற்றும் தாம்பரம் ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. இத்துடன் வழக்கமாக இயக்கப்படும் 2275 பேருந்துகளும் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு 1,38,287 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 32,204 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Transport Department Minister Vijayabaskar says that On the occasion of Deepavali, 4,820 special buses will ply from Chennai to other places on Oct 15, 16, 17, these 3 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X