உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து பேருந்து மீது மோதல்.. 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர்வெடித்து எதிரே வந்த தனியார் பேருந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள வண்டிபாளையம் என்ற இடத்தில் சென்னையிலிருந்து திருச்செங்கோடு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென காரின் டயர் வெடித்து சாலையின் தடுப்புக் கட்டையை தாண்டி எதிர்புறமாக விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.

விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் சென்ற இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடி
அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் 8 வயது மதிக்க சிறுமி உயிரிழந்தார்.