For Daily Alerts
Just In
மதுரை: காருடன் சரக்கு லாரி மோதி விபத்து - 4 பேர் பலி
மதுரை: திருமங்கலம் அருகே கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி ஓன்றியம் அருகே உள்ள தாதகன்குளம் அருகே கேரளாவில் இருந்து வந்த காரும் மதுரையிலிருந்து இராஜபாளையம் நோக்கி சென்று கொண்டி இந்த சரக்கு லாரியும் ஒன்றுக்கு ஒன்று எதிரே மோதின.

இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே பலி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
