For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்களுக்கு பிறகு அவர் மரணமடைந்தார்.

4 months extended for Arumugasamy commission

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் எழுப்பினர். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு நவம்பரில் விசாரணையை தொடங்கினார்.

முதலில் விசாரணை அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இன்னும் சிலரை விசாரிக்க வேண்டியிருப்பதால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து ஆறுமுகசாமியின் ஆணையத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எதிர்தரப்பினர் குறுக்கு விசாரணை செய்து வருவதால் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் வழங்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதன்படி தமிழக அரசு 4 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இது இரண்டாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

English summary
TN Government extension for Arumugasamy commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X