For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்!

கூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கத்திற்கு நடத்தப்பட்ட முதற் கட்டத் தேர்தலில் 4 ஆயிரத்து 600 கூட்டுறவு சங்கங்களில் 300 சங்கங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. மற்ற சங்கங்களுக்கு தேர்தலே நடத்தாமல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

4 retired judges appointed to investigate the complaints of Co-operative Elections

இந்த முறைகேடுகளை தவிர்க்க வாக்காளர் பட்டியல், உறுப்பினர்கள் விவரங்கள், நிராகரித்த மற்றும் ஏற்றுக்கொண்ட வேட்பாளர்களின் விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் திமுக தொடர்ந்த வழக்கில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆர்.எஸ். இராமநாதன், வெங்கட்ராமன், எஸ்.ராஜ சூர்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2 வாரத்திற்குள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

English summary
4 retired judges have been appointed to investigate the complaints of Co-operative Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X