For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்.. குடோனுக்கு சீல்.. ஒருவர் கைது

2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூர் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்கா பறிமுதல்-

    திருப்பூர்: திருப்பூர் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்காவினை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை பொருட்களை பதுக்கி வைத்த குடோனையும் இழுத்து மூடி சீல் வைத்தனர்.

    ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகின்ற. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் புகார்களின்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்து குட்கா, பான்மசாலா போன்றவற்றினை பறிமுதல் செய்தும் வருகின்றனர். நேற்று முன்தினம்கூட கோவை ராஜவீதியில் உள்ள சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    400 Kg Gutkha has been seized and one arrest near Tiruppur

    இந்நிலையில், திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்திலும் இதேபோல பதுக்கி வைக்கப்பட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கணபதிநகரில் உள்ள ஒரு குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் விரைந்து சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    400 Kg Gutkha has been seized and one arrest near Tiruppur

    அப்போது, குட்கா பொருட்கள் பதுக்கி மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அவற்றினை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த குடோனை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பாக சுரேஷ் என்பவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    400 Kg Gutkha has been seized and one arrest near Tiruppur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X