For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 400 டோக்கன்... விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல்

வருமானவரித் துறையினர் இன்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 400 டோக்கன்கள் பறிமுதல்.

Google Oneindia Tamil News

சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங்கியது. இதில் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 400 டோக்கன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். மேலும், புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

400 Tokens seized from Vijayabaskar residence by IT

இந்நிலையில். ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 400 டோக்கன்கள் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று எழும்பூரில் உள்ள அமைச்சருக்கு தொடர்புடைய தனியார் விடுதியில் திடுக்கிடும் பல ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற வரவு செலவு கணக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Income tax department has seized 400 tokens from Health Minister Vijabaskar’s residence and office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X