For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

47 Prisoners releaseன from Chennai Puzhal jail

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த 6 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 12ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

English summary
47 Prisoners are going to release from Chennai Puzhal jail on the centnary function of MGR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X