For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை உட்பட 5 மாவட்ட கலெக்டர்கள் மொத்தமாக ஹைகோர்ட் கிளையில் ஆஜர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    5 மாவட்ட கலெக்டர்கள் மொத்தமாக ஹைகோர்ட் கிளையில் ஆஜர்!- வீடியோ

    மதுரை: நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஹைகோர்ட் கிளையில் இன்று ஆஜராகியிருந்தனர். மதுரை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட எஸ்பியும், விசாரணைக்கு நேரில் ஆஜராகியதால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, மதுரையை சேர்ந்த, அருள்நிதி, முத்துக்குமார், ரமேஷ் போன்ற வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ராஜா அமர்வு முன்பாக இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    5 districts collectors were present at High Court Madurai bench

    அப்போது, இந்த பகுதிகள் முல்லை பெரியாறு பாசன பகுதியாக இருந்தும் கூட, நல்ல மழை காலத்திலும் கன்மாய்கள் நிரம்பவில்லை என்பதை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

    கன்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம், இதுதொடர்பாக குழு அமைக்கலாமா என்பது குறித்தெல்லாம் ஆலோசனை தெரிவிக்க மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்கள், அக்டோபர் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அப்போது உத்தரவிட்டிரு்நதார். அதையேற்று, இன்று 5 மாவட்ட ஆட்சியர்களும், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

    [தாம்பரம், கொரட்டூர், மண்ணடி மக்களே அலர்ட் ப்ளீஸ்.. நாளைக்கு உங்கள் பகுதியில் ஷட் டவுன்!]

    மதுரை மாவட்ட கலெக்டர், நடராஜன் உட்பட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகர ஆணையர், அனீஷ் சேகர், மதுரை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். விசாரணை நடைபெற்றது.

    English summary
    5 districts collectors were present at High Court Madurai bench over lake occupation case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X