For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபர... 5 எம்எல்ஏக்கள் காத்திருப்பு போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் 5 எம்எல்ஏக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 எம்எல்ஏக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓகி புயலின் கோரத்தாண்டவம் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

5 MLAs of Kanyakimari district doing agitation inside district collector room

ஆனால் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதே போன்று ஓகி புயலின் போது கடலுக்கு சென்று கரை திரும்பாத மக்களுக்காக மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு கோரிக்கைகளோடு, புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை தோட்டங்களுக்க உற்பத்திக்கு ஏற்ப நிவாரணம் தர வேண்டும் என்று அந்த மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன், பிரின்ஸ்,மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
5 MLAs of Kanyakumari district doing agitation inside district collector room to fulfill the 3 demands for people welfare which affected the district worstly due to cyclone Ockhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X