For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. பெற்றோர்கள், பொதுமக்கள் குமுறல் எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு

5,8ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு | 5th and 8th standard public exam cancelled

    சென்னை: தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டதுடன், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

    இப்போது, நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் இருக்கிறது.

    இதன்காரணமாக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.. எனவே 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கூறிவந்தது.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது

    கண்டனங்கள்

    கண்டனங்கள்

    அதனால், 5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது... இதையடுத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.. தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்... இடை நிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து சொன்னார்கள்.

    விசிக தலைவர்

    விசிக தலைவர்

    "இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.. பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்... பொதுத்தேர்வு என்பது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஒரு முயற்சி." என்று கொதித்து போனார் திமுக தலைவர் ஸ்டாலின்! "மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லாமல் தடுத்து, ஏழை எளிய மாணவர்களை, பள்ளியை விட்டு வெளியேற்றுவதற்கான ஒரு முயற்சி. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது... இதற்கு தமிழக அரசும் துணைபோவது, மற்றும் அவர்களுடன் கை கோர்ப்பது வேதனையளிக்கிறது" என்றார் விசிக தலைவர் திருமாவளவன்!

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    "சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்; இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் பாமக அன்புமணி ராமதாஸ்! "இது நம் குழந்தைகளின் வாழ்வாதாரம். படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது'" என்று பாய்ந்தார் மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

    முற்றுகை

    முற்றுகை

    "5,8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை.. இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்" என்று சீமான் கண்டனம் சீறினார். இப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பை இந்த திட்டம் சம்பாதித்தது.. இதுபோக கல்வி அமைச்சரின் வீட்டை முற்றுகையிடுவோம் என்ற அறிவிப்பும் வெளியாகி, அவரது வீட்டுக்கு பாதுகாப்பும் போடப்படும் நிலை ஏற்பட்டது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    இந்நிலையில் இந்த திட்டத்தை நீக்கி தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கோட்டையன்

    செங்கோட்டையன்

    "5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.அவற்றை ஜெயலலிதாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்'' என தெரிவித்துள்ளார். அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை ஏராளமானோர் வரவேற்று வருகின்றனர்.!

    English summary
    tamilnadu government has announced that 5th and 8th standard public exam cancelled
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X