For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெலிகாப்டரில் ஓய்வில்லாமல் பறந்து 6,125 கிலோ நிவாரணப் பொருட்களை வழங்கிய கடலோர காவல் படை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 125 கிலோ நிவாரணப் பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளது.

6,125 kg relief materials given via helicopter

சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது. இதில் அந்த வளாகத்தில் இருக்கும் இந்திய கடலோர காவல் காவல் படையின் விமான தளம் பாதிப்புக்குள்ளானது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஹெலிகாப்டர்கள் சேதம் அடைந்தன.

6,125 kg relief materials given via helicopter

இந்நிலையில் சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க கோவாவில் இருந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த ஹெலிகாப்டர் ஓய்வில்லாமல் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு அளித்து வந்தது.

6,125 kg relief materials given via helicopter

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் அளிக்கப்படட்து. ஹெலிகாப்டர் வானில் வட்டமிட அரை மணிநேரத்தில் 200 பேருக்கு நிவாரணப் பொருட்களை கடலோர காவல் படையினர் வழங்கினர்.

6,125 kg relief materials given via helicopter

பொருட்கள் காலியான பிறகு விமான தளத்திற்கு சென்று பொருட்களை மீண்டும் எடுத்து வந்து வீரர்கள் வழங்கினர்.

இது குறித்து கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

6,125 kg relief materials given via helicopter

தன்னார்வலர்கள் பலர் அளித்த நிவாரணப் பொருட்கள் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அளிக்கப்பட்டது. இதுவரை 6 ஆயிரத்து 125 கிலோ பொருட்களை மக்களுக்கு அளித்துள்ளோம் என்றார்.

English summary
6,125 kg relief materials have been given to the people of flood affected Chennai through helicopter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X