For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர்: கொள்ளையடிக்க பங்களாவில் பதுங்கியிருந்த 6 பேர் கைது... போலீஸ் அதிரடி

திருப்பூர் மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கிய இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து மிளகாய்பொடி, கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகர பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்துப்பணியை மேற்கொண்டனர்.

6 robbery gang arrest by police in Tirupur

திருப்பூர் வடக்கு உதவி கமிஷனர் அண்ணாத்துரை, வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சையத் பாபு ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் நேற்றிரவு ஊத்துக்குளி ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்.ஆர்.சி. மில் அருகே உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்ததுடன், அவர்களிடம் இருந்து கத்திகள், மிளகாய் பொடி, முகமூடிகள் ஆகியவற்றையும் பறிமுதல்செய்தனர். பின்னர், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சிவாவயது 20, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த தினேஷ்குமார்34, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திக் 28, மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன்21, திருப்பூர் ராயபுரம் பெத்திசெட்டிபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்30, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த ராஜ்குமார்30 என்பதும் அவர்கள் திருப்பூர் மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

English summary
Police arrested and rounded up 6 persons in Tirupur. They were planning to loot in Tirupur town.They were arrested and imprisoned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X