For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூரில் 6 போக்குவரத்து ஊழியர்கள் சஸ்பென்ட்... 643 பேருக்கு மெமோ!

கரூரில் பணிக்கு வராத 6 போக்குவரத்து ஊழியர்கள் மீது சஸ்பென்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் 643 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, மேலும் 6 பேர் மீது பணிநீக்க நடவடிக்கையும் பாய்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு, ஷய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க அரசை வலியுறுத்தி 7வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நீடிக்கிறது. தமிழக அரசு 2.44 காரணிக்கு மேல் ஊதிய உயர்வு கிடையாது என்று விடாப்படியாக இருப்பதோடு இனி பேச்சுவார்த்தையும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

6 transport employees suspended at Karur

இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அளிப்பது ஊழியர் சங்கத்தினரை கைது செய்வது உள்ளிட்ட வேலைகளில் அரசு இறங்கியுள்ளது. இன்று கரூர் மாவட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து கழகத்தில் பணிக்கு வராத 6 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போன்று பணிக்கு வராத 643 பேருக்கு மெமோவும் அனுப்பப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உரிய விளக்கம் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறன்றி அவர்களை பணியில் இருந்து நீக்கும் செயலில் இறங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கரூரில் 6 போக்குவரத்து ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu transport corporation suspended 6 employees at Karur and issued memo to 643 who were not come to duty and participating in strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X