For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசியில் 6000 பேர் கலந்து கொண்ட மராத்தான்

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசியில், சாலைப் பாதுகாப்பு மற்றும் பசுமை பாரதம் விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மாராத்தான் போட்டியில் 6000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை பாரதத்தை வலியுறுத்தி தமிழ் நாடு காவல்துறை ,ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல், அகில இந்திய தமிழ்நாடு எலும்பு சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தடகள கழகம் ஆகியவை இணைந்து மாபெரும் மராத்தான் போட்டியை நடத்தின.

6000 attend Tenkasi Marathon

அதில் மாற்றுத்திறனாளிகள், பள்ளி. மாணவர்கள் 12- 17 வயது வரை, கல்லூரி மாணவர்கள் 18-45, பள்ளி மாணவிகள் 12-17 வயது வரை, 45. வயதிற்கு மேற்பட்டவர்கள் என 5 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.

6000 attend Tenkasi Marathon

இதில் ஆண்கள் பொதுப்பிரிவில் பாளையை சேர்ந்த்த மனோ, பெண்கள் பொதுப்பிரிவில் சுப்புலட்சுமி, பள்ளி மாணவர்களில் ஆய்க்குடி மதன்குமார், மாணவிகளில் ஆறுமுகக்கனி, 45 வயதுக்கு மேற்பட்டோர் வேல்மணி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

6000 attend Tenkasi Marathon

வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கிடையேயான உலகஅ ளவிலான தடகள போட்டி 2015 ல் பதக்கம் வென்ற வீராங்கனை நாரணம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த ராமலட்சுமி கவுரவிக்கப்பட்டார். விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்கிரமன், அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன், தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்களுக்கு பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையும் தந்தது என கூறினர்.

English summary
More than 6000 persons attended Tenkasi Marathon today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X