For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலந்தூரில் சூடு பறக்க துவங்கி மந்தமாக முடிந்த தேர்தல்.... 63.98% வாக்குப்பதிவு

|

சென்னை: ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு இன்று நடந்த தேர்தலில் 5 மணி நிலவரப்படி 63.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்றது. அத்துடன் சேர்த்து சென்னை ஆலந்தூர் சட்டசபைக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

பலத்த எதிர்பார்ப்புகளுடன் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. கிட்டத்தட்ட 316 மையங்களில் ஆலந்தூர் இடைத்தேர்தல் நடைபெற்றது .

62.98 % voter turn out in Alandur by election

இச்சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஎன்பி வெங்கட்ராமன், திமுக வேட்பாளர் ஆர்எஸ்பாரதி, காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத், ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநிசங்கரன், காந்தியவாதி சசிபெருமாள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், காலை 9 மணிக்கு பதிவான வாக்கு நிலவரப்படி 11 சதவீத ஓட்டுகளும், 11 மணி நிலவரப்படி 11 மணியளவில் 27.6 சதவீத ஓட்டுகளும், 1 மணி நிலவரப்படி 40 சதவீத ஓட்டுகளும், 3 மணி நிலவரப்பட
45.1 சதவீத ஓட்டுகளும் பதிவானதாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கடைசியாக 63.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

English summary
In Alandur by election, which held today 63.98% votes have been polled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X