For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷவாயு தாக்கி 7 பேர் பலி: பெருந்துறை தொழிற்சாலைக்கு சீல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஈரோடு: விஷவாயு கசிவால் 7 தொழிலாளர்கள் பலியான பெருந்துறை சிப்காட் வளாகத்திலுள்ள சாயப்பட்டறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனம் ஒன்றில் ரசாயன குழாய் அடைப்பை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, விஷ வாயு கசிந்து அடுத்தடுத்து 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.

இதையடுத்து, ஆலையின் தனி அலுவலர் ரமணன், ஆலை மேலாளர் ரங்கராஜன், சுத்திகரிப்பு நிலைய மேலாளர் நாகராஜன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அந்த தொழிற்சாலையில், வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் இன்று (19ஆம் தேதி) ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

English summary
Seven workers of a textile dyeing unit at the SIPCOT Industrial Estate in Perundurai died after inhaling methane gas emanating from a valve that they were repairing on Tuesday morning. The dying unit was sealed on Wednesday, following inspection by Gunasekaran Revenue Divisional Officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X