For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

71 சதவீத மாணவர்கள் வாரத்திற்கு 4 மணி நேரம் ஆபாசப்படம் பார்க்கின்றார்கள்- லண்டன் பேராசிரியர் பகீர்!

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் கிட்டதட்ட 71 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு 4 மணி நேரம் ஆபாச படம் பார்க்கிறார்கள் என்று கோவையில் லண்டன் பேராசிரியர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் புள்ளியில் மற்றும் நீதிநெறித் துறை பேராசிரியரும், ரெக்ஸ்யூ அமைப்பின் நிர்வாகியுமான அபிஷேக் கிலிபோடு கோவையில் கருத்துக்கணிப்பு ஒன்றில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "கோவையில் உள்ள 10 கல்லூரிகளில் இருந்து 400 மாணவர்களிடம் ஆபாச படம் பார்ப்பது குறித்த ஆய்வை கடந்த 4 வார காலமாக நடத்தினோம். இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன. இந்த கருத்துக்கணிப்பில் 18 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

71 சதவீதம் மாணவர்களே:

71 சதவீதம் மாணவர்களே:

அவர்களில் 71 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு சுமார் 4 மணி நேரம் ஆபாச படங்களை தங்கள் செல்போன் மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் பார்ப்பதாக தெரிவித்தனர். சுமார் 31 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு 17 முறை பலாத்கார காட்சிகளை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.

மாணவிகள் கடத்தல் சம்பவம்:

மாணவிகள் கடத்தல் சம்பவம்:

இதன் மூலம் போதைப் பழக்கம் போல் ஆபாச படம் பார்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டு உள்ளது தெரிய வந்தது. வருடத்துக்கு புதிதாக 6,200 மாணவர்கள் பலாத்கார ஆபாச படங்களை இணைய தளம் வாயிலாக பார்க்கிறார்கள். இதன் மூலம் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட மாணவிகளை கடத்தும் சம்பவத்தில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் சில மாணவர்கள் விபசார அழகிகளை நாடும் அவலமும் உண்டாகி உள்ளது.

ஆண்டுக்கு 2500 மாணவிகள் பலாத்காரம்:

ஆண்டுக்கு 2500 மாணவிகள் பலாத்காரம்:

வருடத்துக்கு 400 மாணவிகள் ஆபாச படம் எடுக்கவும், பலாத்கார சம்பவத்தில் ஈடுபடுத்தவும் கடத்தப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2500 மாணவிகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இந்த சம்பவத்தை தடுக்க இணையதளத்தில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும்.

பிஞ்சிலேயே பழுக்கும் மாணவர்கள்:

பிஞ்சிலேயே பழுக்கும் மாணவர்கள்:

ஆபாச பட காட்சிகளை பார்ப்பதின் மூலமாக பெண்களை தங்கள் அலைபேசியில் நிர்வாணமாக பார்க்க தூண்டப்படுகிறார்கள். 45 சதவீத மாணவர்கள் சிறுவர்கள் உள்ள ஆபாச படங்களை பார்க்கிறார்கள். இந்த படங்களை பார்த்த பிறகு இளம் வயதிலேயே விபச்சார விடுதிகளுக்கு செல்கிறார்கள். கோவையில் ஒவ்வொரு வருடமும் 360 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு 8 அல்லது 9 வருடங்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

மொத்தமாக 10 லட்சம் மாணவர்கள்:

மொத்தமாக 10 லட்சம் மாணவர்கள்:

தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் ஆபாச படங்களை பார்க்கிறார்கள். 4 லட்சம் மாணவர்கள் தவறான இடங்களுக்குச் செல்கிறார்கள். 7 லட்சம் மாணவர்கள் பலாத்கார காட்சிகளை பார்க்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 15 லட்சம் கற்பழிப்பு காட்சிகள் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1000 மாணவிகள் கருக்கலைப்பில் ஈடுபடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
71 percentage students in Tamil Nadu watching porn movies 4 hours per week, London professor says in an interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X