For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8ம் தேதி, 8,000 பேர் மெரீனா பீச்சுக்கு போறாங்க - எதுக்கு தெரியுமா?!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையை வரும் 8 ஆம் தேதி அன்று 8 ஆயிரம் இளைஞர்கள்,மாணவ, மாணவியர்கள் இணைந்து சுத்தப்படுத்த இருக்கிறார்கள்.

பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணந்து 5 ஆவது முறையாக இந்த கடற்பகுதியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த பணி நடைபெற்று வருகின்றது.

தொண்டு நிறுவனங்கள்:

தொண்டு நிறுவனங்கள்:

சென்னை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் இப்பணியில் சென்னை டிரெக்கிங் கிளப், பூமி போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஈடுபட உள்ளனர்.

துவக்க விழா:

துவக்க விழா:

இந்த சுத்தப்படுத்தும் பணியினை சென்னை மேயர் சைதை துரைசாமி துவங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

மெரீனா டூ அக்கரை:

மெரீனா டூ அக்கரை:

மெரீனா கடற்கரையில் இருந்து அக்கரை என்ற இடம் வரை, 20 கி.மீ. தூரம் வரை இந்த பணி நடைபெறுகிறது. 8 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

50 டன் குப்பைகள்:

50 டன் குப்பைகள்:

இந்த பணியின்போது 50 டன் குப்பை சேகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 85% சதவீதம் குப்பைகளையாவது அகற்ற வேண்டும்.

கடல்நீர் மாசுபாடு விழிப்புணர்வு:

கடல்நீர் மாசுபாடு விழிப்புணர்வு:

இந்த முகாமில் ஒரு பகுதியாக சென்னை டைவ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் டெம்பிள் அட்வென்ச்சர்- புதுச்சேரி குழுவினர் இணைந்து பெசன்ட் நகர் பகுதியில், கடலில் மூழ்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உள்ளனர்.கடல்நீர் மாசுபாட்டை தடுக்கும் விழிப்புணர்விற்காக இதில் ஈடுபட உள்ளனர்.

ஏரிகளிலும் அகற்றும் பணி:

ஏரிகளிலும் அகற்றும் பணி:

கடற்கரையை தவிர மாடம்பாக்கம், தாழம்பூர், நாராயணபுரம், கீழ்க்கட்டளை உட்பட 4 ஏரிகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.இப்பணியினை இந்திய சுற்றுச்சூழல் சமூக நிறுவனம் மேற்பார்வை இட உள்ளது.

பதிவு செய்யும் வழிமுறை:

பதிவு செய்யும் வழிமுறை:

கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்கிறார்கள்.விருப்பமுள்ளவர்கள் www.bhumi.org.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

English summary
About 8,000 volunteers are likely to gather at various locations in the city to clean up nearly 20 km of beach stretches — from Marina to Akkarai — during the fifth edition of the Chennai Coastal Cleanup on June 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X