For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவராத்திரி நாளில் வெளியான தேர்தல் அறிக்கை... 8 கிராம் தாலிக்கு தங்கம்... இது சரியா வருமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எப்போ வரும்... எப்போ வரும்... வருமா? வராதா? என்று எதிர்கட்சியினர் கேட்க... எல்லாருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசியில் தனது பிரம்மாஸ்திரத்தை எய்து விட்டார் ஜெயலலிதா. தேர்தல் அறிக்கையில் தாலிக்கு 8 கிராம் தங்கம் கொடுப்பது சரியாக வருமா என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது.

இலவச அறிவிப்புகள் எதிர்பார்த்தது போல இல்லை என்பதால், இன்னும் எதிர்பார்த்தோம் இப்படி பொசுக்குன்னு போச்சே என்று சிலர் வருத்தப்பட்டாலும்(!) ஜெயலலிதா அளித்துள்ள வாக்குறுதிகள் எதிர்கட்சியினர் பலருக்கு உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது என்னவோ உண்மைதான்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியானதும், இந்தத் தேர்தலின் கதாநாயகன் அதுவும் சூப்பர் ஸ்டார் என்று ரச்சாரம் செய்தார் ஸ்டாலின் . அதைப்பார்த்த அதிமுகவினர் உற்சாகமிழந்தது என்னவோ உண்மைதான்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான உடன், இழந்த தெம்பு எல்லாம் உடம்புக்குள் வந்து விட்டது போல ஒரு வித துள்ளலுடன்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

சதுர்த்தசி திதியில் ரிலீஸ்

சதுர்த்தசி திதியில் ரிலீஸ்

நல்லது செய்வதற்கு சில திதிகளை ஒதுக்கிவிடுவார்கள். பொதுவாக சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி திதிகளில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். ஆனால் நேற்றைய தினம் சதுர்த்தசி திதியாகும். மாத சிவராத்திரி தினமான நேற்று மாலை தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.

புதன்ஹோரை

புதன்ஹோரை

நல்ல காரியங்கள் செய்வதற்கு ராசியான ஓரை இருந்தால் போதும் என்றும் ஜோதிடத்தில் கூறுவார்கள், ஜெயலலிதா, நேற்று வியாழக்கிழமையன்று மாலை 5.20க்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மாலை 5 மணிமுதல் 6 மணிவரை புதன் ஹோரை என்பதால் அந்த நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமாவாசை சரியில்லையே

அமாவாசை சரியில்லையே

அமாவாசை தினமான இன்று ஆர்.கே. நகரில் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று பரணி நட்சத்திரம் என்பதால் நேற்றே தேர்தல் அறிக்கையை வெளியிட்டாரம் ஜெயலலிதா.

8 கிராம் தாலிக்கு தங்கம்

8 கிராம் தாலிக்கு தங்கம்

ஏழைப்பெண் திருமணத்துக்கு ஒரு பவுன் (8 கிராம்) தாலி தரப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுவாக தாலி என்றாலே 4 கிராம்தானாம். அது, ஒரு பண்பாடாக இருக்கிறது. அதிலும் 8 கிராமில் தாலி போடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தாலி கொடியுடன் தங்கம் சேர்ந்து போடும் போது ஒரு பவுன் தாலி செய்து போடுவார்களாம்.

8 ராசியில்லையோ?

8 ராசியில்லையோ?

தமிழகத்தைப் பொறுத்தவரை 8 என்ற எண்ணை ராசியில்லாத எண்ணாகப் பார்க்கிறார்கள். 8 கிராமில் தாலி செய்யச்சொன்னால் எந்த ஆசாரியும் தாலி செய்யமாட்டாராம். எனவேதான் திமுக தேர்தல் அறிக்கையில் கூட 4 கிராம் தங்கம் என்று அறிவித்தார்களாம்.

தலைதீபாவளி மோதிரம்

தலைதீபாவளி மோதிரம்

அதனாலென்னா? அம்மா கொடுக்கிற 8 கிராமில் 4 கிராம் தாலிக்கு வைத்துக் கொண் தலை தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைக்கு 4 கிராம் மோதிரம் செய்து போட்டுக்கலாம் என்றும் பேசுகின்றனர் பெண்கள். ஆக இந்த அறிவிப்பும் ஒரே கல்லில் 2 மாங்காய்தான் என்கின்றனர் அதிமுகவினர்.

வாசிங்மெஷின் போச்சே

வாசிங்மெஷின் போச்சே

தேர்தல் அறிக்கையில் வாஷின்மிஷின், பிரிட்ஜ் அறிவிப்பு வரலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணிய பாலாஜி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கின் தீர்ப்பில்,தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கியபின்னர் இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான நிதி ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலவச அறிவிப்பு

இலவச அறிவிப்பு

பெரிய இலவசங்கள் அறிவித்து உச்சநீதிமன்றத்தில் யாராவது தடை வாங்கினால் பிரச்சினையாகிவிடுமே என்று யோசித்துதான் செல்போன், இலவச மின்சாரத்துடன் நிறுத்திக்கொண்டார்களாம். ஆனாலும் வாஷிங் மெஷின் போச்சே என்பதுதான் பலரது கவலையாக உள்ளது.

பிரம்மாஸ்திரமா?

பிரம்மாஸ்திரமா?

ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எதிர்கட்சியினர் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரம் என்று அதிமுகவினர் பரவலாக பேசி வருகின்றனர். ஆனால் இது பிரம்மாஸ்திரமா? வெறும் புஸ்வானமா என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்து விடும்.

English summary
Jayalalitha touches Tamilnadu women sentiment in 8 gram gold for Thalikku Thangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X