For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில்12 அரசு போக்குவரத்து பணிமனைகளில் உள்ள 800 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 80 சதவீதம் போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தொழிற்சங்கத்தினரை வைத்தும் , தற்காலிக தொழிலாளர்களை கொண்டும் இயக்கப்படுகின்றன.

 80% Public Transport is active in Kanyakumari

மாவட்டத்தின் பெரும்பாலான கடைகள் மூடபட்டுள்ளன. ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தக்கலை , மார்த்தாண்டம் , களியக்காவிளை போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்ட காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அரசு பேருந்துகள் மற்றும் பயணிகள் எல்லைப் பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல் குமுளி எல்லையிலும் கேரளா பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

English summary
80% Public Transport is active in Kanyakumari says Transport Officials. Opposition Bandh over Tamilnadu is going vigor and DMK Leader Stalin and many other Leaders arrested so far for Protesting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X