For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் 8 வழிச் சாலைக்கு 85% நிலத்தை அளந்து முடித்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, மீதம் இருக்கும் பகுதிகளில் நில அளவீடு பணி நடக்கிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கோவை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, மீதம் இருக்கும் பகுதிகளில் நில அளவீடு பணி நடக்கிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.இப்போது இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

85% of Marking of land works for Salem 8 lane road are over, says CM

இந்த நிலையில் இந்த சாலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

அதில், சேலம் சாலைக்கு 85% பகுதிகளில் நில அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் இதுவரை 90 சதவிகிதம் நிலம் ல அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் நிலம் அளவீடு எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சில இடங்களில் நிலம் அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவாக முடியும். இந்த நிலம் அளவிடும் பணிகள் முடிந்தபின் கட்டுமான பணிகள் நடக்கும்.

மக்கள் இந்த சாலைக்கு அதிக அளவில் ஆதரவு தருகிறார்கள். விரைவில் சாலை பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்றுள்ளார்.

English summary
85% of Marking of land works for Salem 8 lane road are over, says CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X