தொடரும் குழந்தைகள் விற்பனை.. ஆசிரியர் உள்பட 9 பேர் கைது
பச்சிளம் குழந்தை விற்பனை விற்பனை தொடர்பாக ஆசிரியர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை: பச்சிளம் ஆண் குழந்தையை 2.15 லட்சம் ரூபாய்க்கு விற்ற விவகாரத்தில் களக்காடு ஆசிரியர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்தவர் அருணாசலம்-தேவிகா தம்பதியிடம் ஆண் குழந்தையை ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த கீழப்பாவூரை சேர்ந்த நயினார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஆலங்குளம் ஆர்சி தெரு ஆறுமுகம், சிவநாடனூர் தங்கபாண்டி, மேலப்பட்டமுடையார் பரமசிவன், கீழப்பாவூர் சேர்மன், சம்பவர் வடகரை பிள்ளைபெருமாள் மனைவி பொன்னுத்தாய், கடையநல்லூர் ஜிந்தாமாதர் மனைவி எஸ்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஆண் குழந்தையை விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை.
இதனால் தம்பதியினர் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஈரோட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தையை ரூ.2.15 லட்சம் கொடுத்து ஓரு கும்பலிடம் இருந்து வாங்கினர். தத்தெடுக்க முறையான ஆவணங்கள் இல்லாததால் வில்சன் அதற்கான ஆவணத்தை கும்பலிடம் கேட்டார். வில்சனுக்கு உரிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.
குழந்தை விற்பனை தொடர்பாக கூடுதல் பண பரிவர்த்தனை ஆலங்குளத்தில் வைத்துதான் நடந்துள்ளது. அப்போது அவர்களுக்குள் ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பான வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டது. இதை கவனித்த பொதுமக்கள் ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
வில்சன் தம்பதியினருக்காக கீப்பாவூரை சேர்ந்த மயில்ராஜ், ஈரோட்டை சேர்ந்த செல்வி என்பவர் மூலம் ஓரு பெண்ணிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்து ஆண் குழந்தையை பெற்றுள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் கேட்டதால் அவர்களுக்குள் பிரச்சனையாகி 9 பேர் சிக்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications