For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் பரவும் டெங்கு: ஜனவரியில் 9 பேர் பலி, 5 பேருக்கு தீவிர சிகிச்சை

Google Oneindia Tamil News

தென்காசி: தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் டெங்குவிற்கு 9 பேர் பலியான நிலையில், மேலும் 5பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்குதல்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 9பேர் பலியாகியுள்ளனர்.

அரசு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆங்காங்கே உயிர்பலிகள் ஏற்பட்டு வருகிறது. இந்நோயின் தாக்குதல் காரணமாக ஏராளமானோர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 die of dengue in Tirunelveli zone last month

தற்போது செங்கோட்டை வட்டாரத்திலுள்ள புதூர் பேருராட்சி பகுதி கதிரவன் காலனியைசார்ந்த பள்ளி மாணவன் ராஜ்குமார், பூலான்குடியிருப்பு கதிரவன் காலனியை சார்ந்த மணி மனைவி இசக்கியம்மாள், மாடசாமி மனைவி மாரியம்மாள், புளியரை தாட்கோ நகர் கருப்பசாமி மனைவி சுந்தரம்பாள், இரவியதர்மபுரம் பள்ளி மாணவி அப்துல் மகள் பெனாசிர், உள்ளிட்ட 5பேர் டெங்கு அறிகுறியோடு செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி,மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை நடந்து வருகிறது.மேற்க்கண்டப் பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

English summary
Nine persons have succumbed to dengue fever so far January month in the three districts of Tirunelveli, Tuticorin and Kanyakumari. 5 cases admitted in Nellai district hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X