For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருத்தணி அருகே பள்ளியில் வழங்கிய குடற்புழு நீக்க மாத்திரையால் தான் மாணவி பலி.. பெற்றோர் புகார்

திருத்தணி அருகே பள்ளியில் வழங்கிய குடற்புழு நீக்க மாத்திரையை சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

திருத்தணி: பள்ளியில் வழங்கிய குடற்புழு நீக்க மாத்திரையை சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணியை அடுத்த கிருஷ்ணசமுத்திரத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 184 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

 A 9 year old girl died after taking tablet given by school

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளியில் படிக்கும் 184 மாணவ மாணவிகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் படித்து வந்த 9 வயது சிறுமி தர்ஷினி குடற்புழு நீக்க மாத்திரையை சாப்பிட்டவுடன் வாயில் நுரை தள்ளி மயங்கியதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தர்ஷினி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். பள்ளியில் வழங்கிய குடற்புழு நீக்க மாத்திரையே சிறுமியின் உயிர் பறிபோகக் காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
A 9 year old girl died after taking tablet which was given in school near Thiruthani. The girls parents accusing that due to the tablet only girl died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X