For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாச்சாம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், "தமிழகம் முழுவதும் போலியோவை ஒழிக்க சுகாதாரத்துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நேற்று முன்தினம் நடந்தது.

96.3 percentage children prevent from polio in Chennai

சென்னை மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட 6 லட்சத்து 73 ஆயிரத்து 169 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 1,375 நிரந்தர முகாம்களும், பஸ்-ரயில் நிலையம், கடற்கரை பகுதிகளில் 156 இதர மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கூடுதலாக 39 நடமாடும் மையங்கள் என மொத்தம் 1,570 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதில் சென்னையில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 940 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெற்று பயனடைந்துள்ளனர். இது மொத்தம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 96.3 சதவீதம் ஆகும். தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாக ஆய்வு செய்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
totally 96.3 percentage children had been insulated by polio drops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X