For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் 98 கைதிகள்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 98 கைதிகள் புழல் சிறையில் தேர்வை எழுதுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புழல் சிறையை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இன்று துவங்கி மார்ச் 31 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2,472 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.

98 prisoners in TN writes Plus 2 exam in Puzhal

இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள். இது தவிர, தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைத்து மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.அதன்படி புழல் சிறையில் தண்டனை கைதிகள் 20 பேரும், விசாரணை கைதிகள் 4 பேரும், திருச்சியில் இருந்து 15 பேரும், கோவையில் இருந்து 13 பேரும், மதுரையில் இருந்து 11 பேரும், வேலூரில் இருந்து 8 பேரும், சேலத்தில் இருந்து 9 பேரும், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேரும், கடலூரில் இருந்து 3 பேரும், புதுக்கோட்டையில் இருந்து 5 பேரும் என மொத்தம் 98 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்.

English summary
The Prisoners throughout TamilNadu are going to write Plus 2 exams today in Chennai Puzhal Central Prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X