For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது பி.எச்டி படிச்ச இத்தனை பேர் தட்டச்சு வேலைக்காக குரூப் 4 தேர்வு எழுதுனாங்களா? அதிர்ச்சி உண்மை

குரூப் 4 தேர்வை மொத்தம் 992 பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் எழுதி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிர்ச்சி ரிப்போர்ட் : குரூப் 4 தேர்வு எழுத வந்த 992 பி.எச்.டி பட்டதாரிகள்- வீடியோ

    சென்னை: குரூப் 4 தேர்வை மொத்தம் 992 பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். அதேபோல் யூஜி, பிஜி பட்டம் பெற்ற மாணவர்கள் பலரும் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள்.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை குரூப் 4 தேர்வு நடந்தது. எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த தடவை அதிக பேர் தேர்வு எழுதினார்கள்.

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மொத்தம்

    மொத்தம்

    மொத்தமாக இந்த தேர்வை எழுத 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தகுதி பெற்றனர். ஆனால் மொத்தமாக 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப மட்டுமே இந்த தேர்வு நடந்தது. இவ்வளவு பேர் இந்த தேர்வை எழுதுவது இதுவே முதல்முறையாகும்.

    எழுதவில்லை

    எழுதவில்லை

    இதற்காக மாநிலம் முழுவதும் 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 608 மையங்களில் 1.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதேசமயம் கடைசி நேரத்தில் 3 லட்சம் பேர் தேர்வை எழுதாமல் தவறவிட்டு இருக்கிறார்கள்.

    பட்டம்

    பட்டம்

    இதில் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக விண்ணப்பித்து இருக்கிறார்கள். மொத்தம் 6.2 லட்சத்திற்கும் அதிகமான பட்டம் பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    டாக்டர்

    டாக்டர்

    அதேபோல் இதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்களும் அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இந்த குரூப் 4 தேர்வை மொத்தம் 992 பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். இவ்வளவு முனைவர்கள் குரூப் 4 தேர்வு எழுதியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தத்தக்கது.

    English summary
    According to the report 992 PhDs holders writes group-4 exam in Tamil Nadu. More than 6 lakhs degree holders writes this exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X