For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவில் 11 வயது சிறுவனை கடித்த 8 அடி நீள கட்டுவிரியன்.. போராடி பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்!

கொடிய விஷமுடைய 8 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்த சிறுவனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி உயிர் பிழைக்க வைத்தனர்.

Google Oneindia Tamil News

வேலூர்: கொடிய விஷமுடைய 8 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்த சிறுவனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக் டர்கள் போராடி உயிர் பிழைக்க வைத்தனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகன் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர் களது மகன் சுனில் (வயது 11). அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறான்.

கடந்த 25ந் தேதி இரவு காற்றோட்டத்திற்காக வீட்டு வாசலில் விஜயகுமார் தனது மனைவி, மகனுடன் படுத்து தூங்கினார். முட்புதர் அடர் ந்த பகுதி என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சுற்றிதிரியும்.

8 அடி நீள கட்டுவிரியன்

8 அடி நீள கட்டுவிரியன்

நள்ளிரவு 1 மணி அளவில் 8 அடியை விட பெரியதாக கொடிய விஷம் கொண்ட ஒரு கட்டுவிரியன் பாம்பு தூங்கி கொண்டிருந்த சிறுவன் சுனிலை கடித்தது. அலறியடித்து எழுந்த சிறு வன் சத்தம் போட்டு கதறி அழுதான்.
பெற்றோர் திடுக்கிட்டு பதறி எழுந்து பார்த்தபோது, பாம்பை கண்டு நடுங்கினர்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

பிறகு பெரிய கட்டையை எடுத்து பாம்பை அடித்து கொன்றனர். பாம்பை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு மகனை பைக்கில் ஏற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

சுயநினைவை இழந்த சிறுவன்

சுயநினைவை இழந்த சிறுவன்

அதற்குள் ரத்தம் உறைந்து, நரம்பு செயலிழந்து போனது. இதனால் சிறுவன் சுனில் சுய நினைவை இழந்தான். சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கையோடு கொண்டுவரப்பட்ட பாம்பு

கையோடு கொண்டுவரப்பட்ட பாம்பு

சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமானதால், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்த 1 மணி நேரத்தில் (26ந் தேதி அதிகாலை 3.30 மணி) கொண்டு வந்து அனுமதித் தனர். அதே ஆம்புலன்சில் பாம்பையும் கையோடு கொண்டு வந்தனர்.

விஷம் முறிப்பு

விஷம் முறிப்பு

உடனடியாக, குழந்தை நல டாக்டர் பேராசிரியர் தரணி ராஜன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், சுய நினைவை இழந்த சிறுவன் சுனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கொடிய விஷத்தை முறிக்கும் மருந்தையும் கொடுத்தனர்.

போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்

போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்

இதையடுத்து, ஒருவழியாக போராடி சிறுவனின் உயிரை காப்பாற்றினர். இதுகுறித்து டாக்டர் தேரணிராஜன் கூறு கையில், சரியான நேரத்தில் சிறுவன் கொண்டு வரப்பட் டான். உயிர் பிழைப்பான் என சிறுவனின் குடும்பத்தினரே நினைத்து பார்க்கவில்லை.

மருத்துவருக்கு நன்றி

மருத்துவருக்கு நன்றி

உயிர் போகும் கடைசி நேரத்தில் சிறுவன் காப்பற்றப்பட்டுள்ளான். இப்போது நலமாக உள்ள சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பி நன்றாக பேசுகிறான். அரசு ஆஸ்பத்திரியை மக்கள் முதலில் நம்ப வேண்டும்.
பாம்பு கடிக்கு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்க ப்படுகிறது என்றார். சிறுவன் மற்றும் அவரது பெற்றோர், டாக்டர் தரணிராஜனிடம் கைகூப்பி தெரிவித்தனர்.

English summary
A 8 feet poisoneus snake bites 11 years old boy in mid night. Govt hospital doctor sturgled to save him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X