For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்பிஐ உத்தரவிட்டும் ரூ.10 நாணயத்தை வாங்க மறுக்கும் வங்கி... வைரலாகும் வீடியோ

புதுச்சேரி வில்லியனூரில் ஒரு வங்கியில் ரூ. 10 நாணயத்தை வாங்க அந்த வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி வில்லயனூரில் ஒரு வங்கியில் ரூ 10 நாணயத்தை வாங்க அந்த வங்கியின் காசாளர் மறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாதவை என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ. 10 நாணயமும் செல்லாது என்று வதந்தி பரவியது.

A bank in Pondy refuses to get back the Rs. 10 coin

இதையடுத்து ரூ.10 நாணயம் செல்லும் என்று ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. ஆர்பிஐயின் விளக்கத்தை நகல் எடுத்து பெரும்பாலான கடைகளில் வியாபாரிகள் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி வில்லயனூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 10 நாணயத்தை பெற காசாளர் மறுப்பு தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை வங்கி மேலாளரிடம் வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்.

அப்போது அவரும் ரூ. 10 நாணயங்களை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து ரூ. 10 நாணயத்தை வாங்க மாட்டோம் என எழுதி கையொப்பமிடுமாறு வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு அவர் நீங்கள் எழுதிக் கொடுங்கள், நான் கையெழுத்து போடுகிறேன் என்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரூ. 10 நாணயத்தை வாங்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியும் வங்கிகள் வாங்காதது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A bank cashier in Villianur, Pondicherry refuses to get back the Rs. 10 coin. This video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X