For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்... பீதியை கிளப்பும் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவை மிரட்டிய இர்மா போன்ற புயல் சென்னையையும் தாக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்!-வீடியோ

    சென்னை: அமெரிக்காவை மிரட்டிய இர்மா போன்ற புயல் சென்னையையும் தாக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

    அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த வாரம் உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சூறையாடியது. புயலுடன் பெய்த கனமழையின் எதிரொலியாக மாநிலத்தின் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில் இர்மா புயல் மற்றும் மழை, வெள்ளத்துக்கு 80க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இர்மா புயல் புரட்டிப்போட்ட ஃபுளோரிடா மாகாணத்தில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை.

    இர்மா போன்ற புயல்

    இர்மா போன்ற புயல்

    இந்த இர்மா புயலைப் போன்ற ஒரு புயல் சென்னையை தாக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நில பயன்பாட்டு ஆராய்ச்சி மையம், இந்திய - ஜெர்மன் சஸ்டைனபிலிட்டி மையம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

    கடல்நீர்மட்டம் உயர்வு

    கடல்நீர்மட்டம் உயர்வு

    அதில் அடுத்த 30 ஆண்டுகளில் சென்னை கடல்நீர் மட்டம் 4.35 மீட்டர் முதல் 6.85 மீட்டர் வரை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் சூறாவளி, புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன்மூலம் 1963 கிலோ மீட்டர் நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

    கடலோர பாதுகாப்பு திட்டங்கள்

    கடலோர பாதுகாப்பு திட்டங்கள்

    கடல்நீர் மட்டம் உயர்வதற்கு ஏற்றதுபோல் கடலோர பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தாவிட்டால் தமிழகம் மிகப்பெரிய சேதத்தை எதிர்க்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கட்டுப்பாடு மண்டலங்களில் மேலாண்மை பணிகளை மேற்கொள்வது தற்போது முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    ஒருங்கிணைந்த கடலோர பகுதி மேலாண்மை திட்டத்தை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வீசிய வர்தா புயலின் போது சென்னை பெரும் சேதத்தை சந்தித்தது.

    3 மீட்டர் வரை உயர்வு

    3 மீட்டர் வரை உயர்வு

    இதைத்தொடர்ந்து கடல்நீர் மட்டம் ஒன்று முதல் 3 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. கடல்நீர்மட்டம் உயர்வதால் சென்னை இர்மா புயலை போன்ற ஒரு புயலை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

    English summary
    A study by Tamil Nadu State Land Use Research Board, along with Indo-German Centre for Sustainability and IIT Madras, has estimated that in the next three decades, Chennai could witness a rise of sea between 4.35 metres and 6.85 metres due to tropical cyclones affecting 1,963 square km of land mass.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X