For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமானம் கொழிக்கும் ரயில்வே பயணிகளின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்... டாக்டர் ஒருவரின் குமுறல்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் மூலம் அதிக வருமானம் பெற்று வரும் துறைகளில் ஒன்று ரயில்வே. ஆனால், வாங்கும் காசிற்கு தக்கபடி, பயணிகளின் நலனிலும் ரயில்வே நிர்வாகம் அக்கறைக் காட்ட வேண்டும் என்பது பரவலான கோரிக்கை.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி என்பவர் முத்துநகர் எக்ஸ்பிரசில் தான் சந்தித்த அனுபவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

A doctor's travel experience in train

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்த நபர் நம் உறவினராகவோ, நண்பராகவோ இருந்தால் நம் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பதிவை படிக்கும் போது, இந்தப் பெண் டாக்டரின் ஆதங்கம் எவ்வளவு தூரம் உண்மையானது ஆழமானது என்பதை நம்மாளும் உணர்ந்து கொள்ள முடியும்.

இதோ அந்தப் பதிவு உங்களுக்காக...

பயணங்கள் முடிவதில்லை..........!!..
கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்குடியிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரசில் சென்னை கிளம்பி விட்டேன்..............நம் ஊர் இரயில் பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை......அன்று 8.30 மணிக்கு 3 இட்லிகளை விழுங்கி விட்டு 9.30 மணிக்கெல்லாம்
படுத்து விட்டேன்........
நடுநிசி .....சில குரல்கள் " டாக்டரம்மா எங்கம்மா இருக்கீங்க ?..என்று........திடுக்கென்று எழுந்து என்ன சார் என்றவுடன்
டிக்கெட் பரிசோதகரும் , இரயில்வே ஊழியர்கள் சிலரும் என் இருக்கை பக்கம் வந்து, அம்மா பேச்சு மூச்சில்லாமல் ஒருத்தர் கிடக்கிறார்மா,
வந்து பார்க்க முடியுமானு கேட்டவுடன் பதிலேதும் சொல்லாமல்,
என் கைப்பையில் எப்போதும் இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஓடினேன்.......
அப்போதுதான் மதுரையை இரயில் கடந்திருந்தது.......3 கோச்சுகள் தாண்டியதும் வாந்தியெடுத்து சரிந்து கிடந்த அந்த திடமான மனிதரைப் பார்த்தேன்.....பார்த்ததுமே தெரிந்தது.....பலமான ஹார்ட் அட்டாக்.....அவரது இதயம் அப்போதுதான் தன் துடிப்பை மெதுவாக நிறுத்திக் கொண்டு இருந்தது ....கோச்சில் அனைவரும் விழித்து ஒரு நிசப்தம்........
உடனே செயலில் இறங்கினேன்......மார்புக்கூட்டை அழுத்தி, வாயில் செயற்கை சுவாசம் கொடுத்து CPR ( CARDIO PULMONARY RESUSCITATION ) ....ஏறக்குறைய முக்கால் மணி நேரம் போராடினேன் ஓடும் இரயிலில்,, அவரின் இதயத்தை மறுபடியும் சீராக இயங்க வைக்க... ....இரயிலில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இல்லாமல்.......இளைஞர்கள் சிலரும் என்னோடு சேர்ந்து போராடினார்கள்....உற்சாகப் படுத்தினார்கள்.........
சிலர் பயத்தில், சிலர் பிரார்த்தனையில், சிலர் கவலையில், சிலர் தங்கள் மொபைலில் படமும் வீடியோவும் எடுத்தபடி.......ஆனால் அத்தனை பேரும் அவர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்......சாதி மதம் மாநிலம் மொழி இனம் கடந்த மனித நேயத்துடன் அனைவரும்........
நடுநடுவே விட்டு விட்டு இதயத் துடிப்பு மீண்டு வந்து வந்து போனது......முழுதாக முறையாக. சிகிச்சை செய்ய முடியாமல் , தனியாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்தேன்......இரயிலில் ஆக்ஸிஜனோ,, Defibrillation Machine or Intubation Instruments இருந்திருந்தால் எப்போதோ 15 -20 நிமிடங்களில் அந்த மனிதர் மீண்டிருப்பார்.....இரயிலில் மருத்துவ ரெட் அலர்ட் சிக்னல் கூட. இல்லை......
திண்டுக்கல் வந்து விட்டது.......ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை....வருத்தமாக இருந்தது........அங்கே தூக்கக் கலக்கத்தோடு காத்திருந்த அந்த இரயிவேயின் இளம் பெண் மருத்துவரிடமும் ஊழியர்களிடமும் சொல்லி,, தேவையான அவசர சிகிச்சைகளை செய்து விட்டு,, அடுத்து செய்ய வேண்டியவைகளையும் சொல்லி விட்டு ,, அந்த மனிதரையும் அவரின் குடும்பத்தாரையும் அங்கு
ஒப்படைத்த பின் ஒரு மன திருப்தியோடு சக பயணிகளின் ,,TTR கள் ,, அங்கிருந்த இரயில்வே ஊழியர்களின் ஆசிகளோடு மீண்டும் என் பயணத்தைத் தொடர்ந்தேன் சென்னை நோக்கி.......
அந்த மனிதர் 71 வயது குஜராத்காரர்.......நம் தமிழகக் கோவில்களை சுற்றிப் பார்க்க தன் குடும்பத்துடன் வந்தவர்......அவர் நன்றாக உயிர் பிழைத்திருக்க வேண்டும் என நம்புவோம்.....வேண்டுவோம்.........
நம் இரயில்வே நிர்வாகம் நிறைய முன்னேற வேண்டும் டெக்னிக்கலாக.....நிறைய வருமானம் பார்க்கும் துறை அது.... ..உயிர் காக்கும் உபகரணங்கள் மிக அவசியம் என்று நாம் உணர்த்த வேண்டும்......இதைப் படிக்கும் உயர் இரயில்வே அதிகாரிகள் உணருங்கள் அவசரத்தை... ... .......இன்று அவர்.......நாளை நாமாகக் கூட இருக்கலாம்.......
இந்தப் படங்கள் கூட TTR அவர் மொபைலில் கிளிக்கி என்னிடம் பகிர்ந்தவையே....நிறையவே பாராட்டினார் எக்மோர் வந்தும் கூட.......நன்றி மக்கா.......!...
வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்.....!!.........
மகிழ்ச்சி...!!!......

English summary
A Chennai based doctor has wrote about her travel experience in thoothukudi - Chennai muthunagar express train. She has expressed that a lot of amenities should be done to passenger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X