For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதிராமங்கலம் கதறல்- காவிரிப்படுகையின் கதறல் சாட்சியம்- நெஞ்சை பதறவைக்கும் ஆவணப்படம் #kathiramangalam

காவிரி பாசன பகுதியின் பேரவலத்தை அம்பலப்படுத்தும் கதிராமங்கலம் கதறல் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அலங்காநல்லூர், மெரினா கடற்கரை, நெடுவாசலைத் தொடர்ந்து போர்க்களமாகி இருக்கிறது தமிழக நெற்களஞ்சிய பூமியின் கதிராமங்கலம்.. ஓஎன்ஜிசியின் திட்டங்களால் வளம்கொழிக்கும் கதிராமங்கலம் வானம்பார்த்த பாலைவனமாகும் அபாயத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கதிராமங்கலம் கதறல் என்கிற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்காக அலங்கநால்லூர் வாடிவாசலில் மக்கள் புரட்சி மையம் கொண்டது. அதன் பெருவெடிப்பாக சென்னை மெரினா கடற்கரை வரலாறு காணாத புரட்சியை உலகுக்கு சொன்னது.

நமக்கும் ஜல்லிக்கட்டு உரிமை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீத்தேன், ஹைட்ரோகார்பன், கச்சா எண்ணெய் என்கிற பெயர்களில் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி பாசனபகுதிகளை பாழ்படுத்தும் பாலைநிலத்திட்டங்கள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கின.

கதிராமங்கலம் போர்க்களம்

கதிராமங்கலம் போர்க்களம்

இதற்கு எதிராக நெடுவாசலில் தொடங்கிய போராட்ட தீ இன்னும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிகிறது. இப்போது கும்பகோணம் கதிராமங்கலம் மற்றும் ஒரு போர்க்களமாகி இருக்கிறது. சின்னஞ்சிறு கதிராமங்கலம் கிராமத்தை ஆயிரக்கணக்கான போலீசார் முற்றுகையிட்டு தனித் தீவாக்கி வைத்துள்ளனர்.

கதறுகிறது கதிராமங்கலம்

கதறுகிறது கதிராமங்கலம்

உள்ளூர் மக்கள் நடமாட முடியாது... வெளியூர்களில் இருந்து எவரும் உள்ளே போய்விட முடியாது... கதிராமங்கலத்தின் உக்கிரத்தை உரக்க பேசும் தலைவர்களும் இல்லை.. இதனால் போலீசாரின் அடக்குமுறை பிடியில் சிக்கி கதறுகிறது கதிராமங்கலம்.

ஆவணப்படம்

கதிராமங்கலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த காவிரி பாசனபகுதிகளிலும் இதே நிலைமை தொடர்கிறது... இந்த பேரவலத்தை விவரிக்கும் ஆவணப் படம் 'கதிராமங்கலம் கதறல்' என்ற பெயரில் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பன்மைவெளி வெளியீடு

பன்மைவெளி வெளியீடு

பன்மைவெளி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் இந்த ஆவணப்படத்தை வெளியிட கதிராமங்கலம் பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர்.

கேரளா புரட்சிப் பாடல்

கேரளாவை உலுக்கிய அணு உலைக்கு எதிரான இனி வரும் தலைமுறைக்கு இவ்விடவாசம் சாத்தியமோ என்ற பாடலை மொழிபெயர்த்து கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். இந்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டிருப்பது இந்த பாடல் நெஞ்சை பிளப்பதாக இருக்கிறது.

English summary
A Documentary film on Kathiramangalam issue was released by protestors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X