For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியரை தாக்கி வழிபறி.. 3 பேர் கைது!

சென்னையில் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் மீது கொடூரத்தாக்குதல்- வீடியோ

    சென்னை: பெரும்பாக்கத்தில் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பிப்ரவரி 12 ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மென்பொறியாளர் லாவண்யாவை தாக்கி விட்டு, அவரிடம் இருந்து நகை, பணம், மொபைல் போன் போன்றவற்றை மர்ம கும்பல் வழிப்பறி செய்தது.

    A female software Engineer attacked in Chennai: Three arrested

    இதையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் லாவண்யா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    தன்னை தாக்கியவர்களை சும்மா விடக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் லாவண்யாவை தாக்கி வழிபறி செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து பள்ளிகரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    English summary
    A female software Engineer attacked by three persons in Chennai on 12 of this Month. Those three have been arrested in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X