For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல் தட்டி காலில் ஏற்பட்ட காயத்துக்கு நாய்க்கடி ஊசி போட்ட அரசு மருத்துவர்.. சென்னையில் அலட்சியம்!

கல் தட்டி காலில் ஏற்பட்ட காயத்துக்கு அரசு மருத்துவர் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கல் தட்டியதால் காலில் ஏற்பட்ட காயத்துக்கு அரசு மருத்துவர் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் நரேஷ். 8 ஆம் வகுப்பு படித்து வரும் நரேஷ் கடந்த 10 ஆம் தேதி நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த கல் ஒன்று தட்டியதில் கால் விரலில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு சிகிச்சை எடுப்பதற்காக 11 ந்தேதி காலை நரேஷ் தனது சகோதரருடன் ராயப்பேட்டை அரசுமருத்துமனைக்கு சென்றுள்ளார்.

காயத்துக்கு நாய்க்கடி ஊசி

காயத்துக்கு நாய்க்கடி ஊசி

அங்கிருந்த மருத்துவர் காலில் உள்ள காயத்தை பார்த்துவிட்டு நாய் கடிக்கு போடும் ஊசியை எழுதி கொடுத்துள்ளார். என்ன ஊசி என்று தெரியாமலேயே 2 ஊசிகளை நரேஷ் போட்டு கெண்டுள்ளார்.

தொடர்ந்து நாய்க்கடி ஊசி

தொடர்ந்து நாய்க்கடி ஊசி

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 14 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஊசி போடவேண்டும் என்றும் அரசு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து 14ஆம் தேதி நரேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்

அதிர்ச்சியடைந்த மருத்துவர்

அப்போது அங்கு வேறொரு மருத்துவர் இருந்துள்ளார். நரேஷுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சீட்டில் நாய் கடி ஊசி என்று எழுதி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் நரேஷிடம் விசாரித்துள்ளார்.

மருத்துவர் மீது நடவடிக்கை

மருத்துவர் மீது நடவடிக்கை

அப்போதுதான் தனக்கு நாய் கடி ஊசி போடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார் நரேஷ். அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எழுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஒருவர் இத்தனை அலட்சியமாக செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A govt doctor injected a dog bite injection to a boy for the injury on the leg. This incident happened in the Chennai Rayapettah hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X