For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஆசிரியர்- அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நெல்லை: ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியர் முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது.

A govt employee who criticises Jugde gets judicial custody

இதற்கு கண்டனம் சென்னை ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்து போராட்டக்காரர்களுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார். கடந்த 14-ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது நீதிபதியை ஊழியர் பாளை பெருமாள்புரம் அரசு வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனையில் பணியாற்றும் திருமால் நகரைச் சேர்ந்த முருகன்(47) அவதூறாக பேசினார்.

இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A government staff who criticises HC judge was arrested and now sent to judicial custody when he involved in Jactto Geo strike in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X