For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஜிபி தலைமை.. 6 சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு.. தமிழகத்தில் சிஏஏ போராட்டங்களை தடுக்க நடவடிக்கை!

தமிழகம் முழுக்க சிஏஏ போராட்டங்களை கணிகாணிக்க 6 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: தமிழகம் முழுக்க சிஏஏ போராட்டங்களை கணிகாணிக்க 6 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் சூடுபிடித்து உள்ளது. நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்

    தொடர் போராட்டம்

    தொடர் போராட்டம்

    மிக மோசமாக தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இதற்கு எதிராக மூன்றாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இதற்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது.

    என்ன குழு

    என்ன குழு

    இந்த நிலையில் தமிழகம் முழுக்க சிஏஏ போராட்டங்களை கணிகாணிக்க 6 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் இந்த குழுவில் இருக்கிறார்கள். இதில் முருகன், அபய்குமார் சிங், மகேந்திரன் ஆகியோர் மிகவும் மூத்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    யார் இருக்கிறார்கள்

    யார் இருக்கிறார்கள்

    தமிழகம் முழுக்க மண்டலம் வாரியாக இவர்கள்தான் போராட்டங்களை கண்காணிப்பார்கள். எங்கே போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது, எங்கே அனுமதி இன்று போராட்டம் நடக்கிறது என்பதை இவர்கள்தான் கண்காணிப்பார்கள். அதேபோல் எந்தெந்த போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதையும் இவர்கள்தான் தீர்மானிப்பார்கள் .

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    இவர்கள் எல்லோருக்கும் தலைவராக டிஜிபி திரிபாதி செயல்படுவார். இவர் அனைத்து விதமான பணிகளையும் இவர்கள் கொண்டு கண்காணிப்பார். இந்த போராட்டங்களுக்கு யார் நிதி அளிக்கிறார்கள். போராட்டம் எப்படி நடக்கிறது. மக்கள் எப்படி கூடுகிறார்கள் என்பதை இந்த குழு தீவிரமாக கண்காணிக்கும். புதிதாக எங்கும் போராட்டம் முளைக்காமல் இருக்கும் வகையில் இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு நடத்துவார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A group of 6 special officers leading by DGP formed against Anti CAA protest in TN after Vannarapettai protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X