For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

26 நிமிடங்கள் ஒலிக்கும் திருக்குறள் பாடலுக்கு, 5000 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனம் ஆடப் போகிறார்கள். வரும் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவிருக்கிறது.

பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

A Guinness record Bharatham concert in Chennai

நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடன அமைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது திருக்குறள்களை கருவாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட 26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள் ஒன்று கூடி நடனமாட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியம் தலைமை தாங்குகிறார். மேலும் பல பரத நாட்டியக் கலைஞர்களும், திரைப்பட நடன இயக்குநர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

இந்நிகழ்வில் நடனமாடுவதற்கு பதிவு செய்த கலைஞருக்கு 26 நிமிடங்களுக்கான பாடலும், அப்பாடலுக்கு நடனக் கலைஞர் ஒருவர் ஆடுகின்ற ஆடல் வடிவமும் பதிவு செய்யப்பட்ட காணொளித் தட்டு (டிவிடி)

A Guinness record Bharatham concert in Chennai

வழங்கப்படும். இந்த காணொளியைப் பார்த்து பயிற்சி செய்து கலைஞர்கள் இந்நிகழ்வில் ஆடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் நடனப் பள்ளி ஆசிரியர்களும், நடனப் பள்ளி இயக்குநர்களும் பல்வேறு வகையில் பணியாற்றி வருகிறார்கள்.

வெளியூரிலிருந்து வருகின்ற கலைஞர்களுக்கு தங்கும் இடவசதியும், பயிற்சி செய்வதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் பரதக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

A Guinness record Bharatham concert in Chennai

5000 கலைஞர்கள் பங்கேற்க இருக்கும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வென்பதாலும், 5000 கலைஞர்களின் பெற்றோர்கள், 500க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட நடனப்பள்ளிகளின் இயக்குநர்கள், 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் வருகை தந்து நிகழ்ச்சியினை சிறப்பு செய்ய உள்ளதாலும் இதற்கான ஏற்பாடுகளை வேல்ஸ் பல்கலைக்கழகம், லஷ்மன் ஸ்ருதி, விசாகா மீடியா ஆகிய நிறுவனங்கள் இரண்டு மாத காலமாக செய்து வருகின்றனர்.

இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்க விரும்பும் நடன கலைஞர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 98404 80791 / 96775 00442 / 044 - 24747206.
வேல்ஸ் பல்கலைகழகத்தில் பதிவு செய்ய: 98410 72593, 98947 15465

ஆன்லைனில் பதிவு செய்ய: www.lakshmansruthi.com .

English summary
More than 5000 dancers will assemble in Chennai for a Guinness record Bharatha Nattiyam concert on April 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X