For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமுதியில் சிறுவனின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சி - தலைமை ஆசிரியர் தலைமறைவு - வீடியோ

கமுதி அருகே தலைமை ஆசிரியர் பெற்றோர் மீது இருந்த முன் பகையால் தன்னிடம் படித்த மாணவனைக் கொல்ல முயற்சித்ததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

கமுதி: பெற்றோர்கள் மீது இருந்த முன் பகை காரணமாக தன்னிடம் படித்த ஏழு வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கமுதி அருகே பகநதி என்ற ஊரில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் சத்தியசீலன் டேனியல். இவருக்கும் தேவசித்தம் என்ற 7 வயது மணவனின் பெற்றோருக்குமிடையில் பிரச்சனை இருந்துள்ளது.

அந்த பிரச்சனைக்காக, தலைமையாசிரியர் டேனியல் கொஞ்சமும் இரக்கமின்றி சிறுவன் சத்தியசீலன் கழுத்தில் நைலான் கயிறைப் போட்டு நெறித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் தலையிட்டு சிறுவனை காப்பாற்றியுள்ளனர். ஆனால் சிறுவன் தேவசித்தம் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை முயற்சியில் ஈடுபட்ட சத்தியசீலன் டேனியல் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

English summary
A headmaster tried to kill his own student as he has difference of opinion with his parents. Police searching the headmaster
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X