For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம கனவு காலி.. ரஜினி வந்தால் அவ்வளவுதான்.. பாஜகவிற்குள் போர்க்கொடி தூக்கும் முக்கிய பெண் புள்ளி!

நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் பாஜக இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்குள் போர்க்கொடி தூக்கும் முக்கிய பெண் புள்ளி!- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் பாஜக இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆனால் பாஜகவின் இந்த திட்டம் அக்கட்சியை சேர்ந்த மிக முக்கியமான ஒரு அமைச்சருக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்க போகிறார் என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து உள்ளது. பெரும்பாலும் அடுத்த வருடம் அவர் தை 1ம் தேதி கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் ரஜினி பாஜக கட்சியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகிறார். இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்களுக்கும் அவர் மிகவும் நெருக்கமான தலைவராகி உள்ளார்.

    அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை!அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை!

    பாராட்டினார்

    பாராட்டினார்

    இந்த நிலையில்தான் காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் பாஜக கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மிகவும் வலிமையாக செயல்பட்டார். மிகவும் திறமையான முடிவை அவர் எடுத்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.

    பாஜக திட்டம் என்ன

    பாஜக திட்டம் என்ன

    இதனால் தமிழகத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின் அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு உள்ளது. அதாவது அதிமுக - பாஜக - ரஜினியின் கட்சி மூன்றும் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மிக முக்கியமாக, ரஜினிதான் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் கூறுகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இதற்கு பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அவர் தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். சென்ற முறையும் அவர் முக்கிய அமைச்சரவை பொறுப்பை வகித்தார். இந்த முறையும் அவர் முக்கிய அமைச்சரவை பொறுப்பை வகித்து வருகிறார்.

    முன்பு என்ன திட்டம்

    முன்பு என்ன திட்டம்

    ரஜினிகாந்தை வைத்து பாஜக அரசியல் செய்ய நினைப்பதற்கு முன் அந்த தமிழக புள்ளியைத்தான் பாஜக முதல்வர் வேட்பாளராக மனதில் வைத்து இருந்தது. ஆனால் ஓகி புயல் சமயத்திலும், நீட் தேர்வு சமயத்திலும் அந்த தமிழக புள்ளி கொடுத்த பேட்டிகள் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு தமிழகத்தில் கொஞ்சம் எதிர்ப்பு அலை எழுந்தது. பாஜகவின் பெயரும் கெட்டது.

    இனி இல்லை

    இனி இல்லை

    இதனால் அவருக்கு பதிலாக தமிழகத்தில் ரஜினியை வைத்து கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்கும் முடிவிற்கு பாஜக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் அந்த தமிழகத்தை சேர்ந்த அமைச்சருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து அப்படியே தமிழக முதல்வராகலாம் என்று கனவு கண்ட அந்த புள்ளிக்கு இப்போது பாஜகவே முட்டுக்கட்டை போட்டு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    A major leader in BJP opposes the rise of Rajinikanth in Tamilnadu politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X