For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது.. ஹைகோர்ட் கிளையில் மனு

தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஹைகோர்ட் கிளையில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஹைகோர்ட் கிளையில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுக்க பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 50% மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3,36,103 விண்ணப்பங்கள்வந்துள்ளது வந்துள்ளது.

A man files petition against govt.'s subsidy for scooter scheme

முதற்கட்டமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு தடை கோரி ஹைகோர்ட் கிளையில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அரசின் நிதிநிலை பற்றாக்குறை அதிகரிப்பதாக குற்றம்சாட்டி மனு கொடுக்கப்பட்டு உள்ளது

மேலும் தொடர்ந்து இலவசங்கள் கொடுப்பதால் நிதி நிலை மோசமடைகிறது என்றுள்ளார். திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

English summary
Edappadi Palaniswamy led ADMK Government planned to give Subsidy Scooters on Jayalalithaa Birthday. A man named Ramkumar Athithan filed a petition against govt.'s subsidy for scooter scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X