For Daily Alerts
Just In
காவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி

காவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்-வீடியோ
சென்னை: காவிரிக்காக சென்னை மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐபிஎல் போட்டியை தமிழகத்தில் நடத்த விடாமல் விரட்ட போராடிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

வேண்டாம் என்றபோதும் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டதால் பாம்பு விடுவோம் என்றேன் என்றும் அவர் கூறினார்.
காவிரிக்காக மெரினாவில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!