For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4வதும் பெண் குழந்தையா? வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த செவிலியர்.. 7 மாத கர்ப்பிணி பலி

மதுரை அருகே 4வதும் பெண் குழந்தையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த செவிலியர்.. 7 மாத கர்ப்பிணி பலி

    மதுரை: உசிலம்பட்டி அருகே 4வதும் பெண் குழந்தையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் பாண்டி என்பவரின் மனைவி லட்சுமி.

    38 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்து வருகிறார். உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி ராமுத்தாய். இந்த தம்பதிக்கு ஏற்கனவே அழகு சித்ரா (9) பிரவினா (6) லட்சுமி (3) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

    பெண் குழந்தை என சந்தேகம்

    பெண் குழந்தை என சந்தேகம்

    இந்நிலையில் ராமுத்தாய் 4வது முறையாக கர்ப்பம் தரித்தார். 7 மாத கர்ப்பிணி 4 வது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்கும் என சந்தேகமடைந்தார்.

    வீட்டிலேயே கருக்கலைப்பு

    வீட்டிலேயே கருக்கலைப்பு

    இதையடுத்து கருக்கலைப்பு செய்ய திட்டமிட்ட ராமுத்தாய், கர்ப்பத்தை கலைக்க செவிலியர் லட்சுமியிடம் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண் ராமுத்தாய்க்கு இன்று காலை செவிலியர் லட்சுமி தனது வீட்டிலேயே கருக்கலைப்பு செய்தார்.

    கர்ப்பிணி பலி

    கர்ப்பிணி பலி

    அப்போது எதிர்பாராதவிதமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செவிலியர் கைது

    செவிலியர் கைது

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி போலீசார் செவிலியர் லட்சுமியை கைது செய்தனர். கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A month pragnant lady dead while abortion in house at Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X