For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகிய தாய்!

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் தாய், மகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்த நிஷா என்பவருடன் திருமணம் நடந்தது.

A mother and son were killed in a fire caused by an electrical leakage near Chengalpattu

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிஷா கணவனை பிரிந்து ஆதனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். இந்நிலையில் இன்று நண்பகல் ஒரு மணி அளவில் நிஷாவும் அவரது ஐந்து வயது மகனுமான டேனியலின் தனியாக இருந்துள்ளனர் அப்போது மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது.

A mother and son were killed in a fire caused by an electrical leakage near Chengalpattu

இதனிடையே வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் நிஷாவும் மகன் டேனியலும் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடலில் பற்றிய தீயை நீரை ஊற்றி அணைத்துள்ளனர். மேலும் தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

வாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ் வாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A mother and son were killed in a fire caused by an electrical leakage near Guduvancheri in Chengalpattu district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X