For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா டிரெண்ட் ஆக்கிய டுவிட்டர்வாசிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் வானிலையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துவதில் சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பங்குண்டு. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முடிவான அடுத்த நொடியே டுவிட்டரில் கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பதிவேற்றி கலங்கடித்தார்கள்.

இளைஞரணி, இலக்கிய அணி என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டிய கட்சியினர் கூட ஐ.டி அணி என்று ஆரம்பித்து மாறி மாறி டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.

5 ஆண்டுகாலம் ஆண்ட அதிமுக மீண்டும் ஆட்சியை தொடர பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்ப எதிர்கட்சிகள் தனித்தனியாக பல வியூகங்களை வகுத்து வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க டுவிட்டரில் #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா என்று ஹேஸ்டேக் பதிவிட்டு அதனை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கிவிட்டனர் வலைத்தளவாசிகள்.

தேசிய அளவில் டிரெண்ட்

இந்த ஆட்சி மாறத்தான் வேண்டுமா? இந்த வார்த்தை இன்றைக்கு தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. பலருக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தமே புரியவில்லையாம்.

இதுக்காக கண்டிப்பா இந்த ஆட்சி மாறனும்

சாதாரணமாக ஒருவர் போட்ட ஹேஸ்டேக்கை டிரெண்ட் ஆக்கிய பெருமை திமுகவினரையே சாரும். இந்த ஹேஸ்டேகுக்கு பதிலடியாகவும் பலர் பதிவுகளை ஏற்றினர். அதில் ஒருவர் அதிமுகவினர் வளைந்து, நெளிந்து கும்பிடு போடுவதற்காகவே மாறணும் என்று கூறியுள்ளார்.

எதுக்கு மாறணும்

களவாணி படத்தின் ஸ்டில்ஸ் போட்டு மீம்ஸ் போட்டுள்ள வலைஞர்கள், 5 வருஷத்தில புது ரேசன் கார்டு கொடுக்க துப்பில்லையா என்று கேட்டுள்ளார் ஒருவர்.

ஸ்டாலின் காலில்

அதிமுகவினர் பகிரங்கமாக ஜெயலலிதாவின் காலில் விழுவார்கள். ஆனால் ஸ்டாலின் காலில் திமுகவினர் விழுவதை வைத்து கமெண்ட் அடித்துள்ளனர் சிலர்.

அம்மா மோதிரம்

அதிமுகவோ திமுகவோ மெகா சைஸ் மோதிரம் போடுவது ஒரு ட்ரெண்ட். அதையும் விட்டு வைக்கவில்லை வலைஞர்கள்.

அமைச்சர் வளர்மதி

தீச்சட்டியோ, உருள்வலமோ எதையும் பயபக்தியோடு செய்யும் வளர்மதிக்காகவாவது இந்த ஆட்சி இருக்கட்டுமே என்கின்றனர் சிலர்.

விஜய், திமுக

2016 தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்யப்போவதாக ஒரு கருத்து பரவியது. அதற்காகவே இந்த மீம்ஸ்.

ஸ்டிக்கர் ஆட்சி

வெள்ளம் வந்த போது நிவாரணப் பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர், ராணுவ வீரர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் போது கூட ஜெயலலிதா படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக எம்.எல்ஏக்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

இன்னும் வரட்டுமே

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கி, அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர் என்று வந்தது. இனி
அம்மா பெட்ரோல் பங்க், அம்மா தியேட்டர், அம்மா கழிப்பறை, அம்மா சிம் வந்திரட்டும் என்கின்றனர் சிலர்.

English summary
A new trending is on in social media on ADMK govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X