For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி- என்.ஜி.ஓ மீது புகார்- வீடியோ

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தொண்டு நிறுவனம் மீது மக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    தொண்டு நிறுவனம் மீது புகார்-வீடியோ

    கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதாகக் கூறி அவர்களிடமிருந்து முன்பணம் வாங்கிய தொண்டு நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காத காரணத்தால் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.

    திருவாரூரைச் சேர்ந்தவர்கள் சக்திவேல், சாந்தி தம்பதி. இவர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள விவசாயிகளிடம் தாங்கள் கிரீன் டிரஸ்ட் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர்.

    A non governmental organization cheated farmers in krishnagiri

    அதனை நம்பி பொதுமக்களும் அவர்களிடம் பணம் கொடுத்தனர். இப்படி அவர்கள் வசூலித்த பணம் பல கோடியைத் தாண்டும் என்கிறார்கள். இந்நிலையில் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் கடன் வாங்கித் தராத காரணத்தால், கொடுத்த முன்பணத்தை கேட்டுள்ளனர்.

    அதற்கு தொண்டு நிறுவன தம்பதி, பணத்தை கொடுக்க முடியாது என பதில் அளித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொண்டு நிறுவனத்தின் மோசடி குறித்து புகார் அளித்தனர்.

    English summary
    A non governmental organization cheated farmers and affected farmers gave complaint in police SP office in Krishnagiri
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X